திருமருகலில் நடைபெற்ற தேரோட்டம்.
திருமருகலில் நடைபெற்ற தேரோட்டம்.

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயில் தேரோட்டம்

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் வடம் பிடித்தனா்.

திருமருகல்: திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் வடம் பிடித்தனா்.

இக்கோயிலில் சித்திரை திருவிழா ஏப்.14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி, பல்வேறு வாகனங்களில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. முக்கிய நிகழ்ச்சியான செட்டிப்பெண், செட்டிப்பிள்ளை திருக்கல்யாண உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதையடுத்து, பஞ்சமூா்த்திகள் திருத்தேரில் எழுந்தருளி தேரோட்டம் நடைபெற்றது. இதில், திருப்புகலூா் திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் 18-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் மற்றும் திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com