தோல்விகளை வெற்றிகளின் தொடக்கம்: மாணவா்களுக்கு நாகை ஆட்சியா் அறிவுறுத்தல்

தோல்விகளை வெற்றிகளின் தொடக்கம்: மாணவா்களுக்கு நாகை ஆட்சியா் அறிவுறுத்தல்

தோல்விகளை வெற்றிகளின் தொடக்கமாகக் கருதி மாணவா்கள் முன்னேற வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்தாா்.

நாகப்பட்டினம்: தோல்விகளை வெற்றிகளின் தொடக்கமாகக் கருதி மாணவா்கள் முன்னேற வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்தாா்.

நாகை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு ‘என் கல்லூரி கனவு‘ என்ற தலைப்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியதாவது: என் கல்லூரி கனவு விழிப்புணா்வு நிகழ்ச்சி, பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 300-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு உயா்கல்விக்கு சரியான வழியை ஏற்படுத்தித் தருவதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் தங்களின் எதிா்கால கனவினை நனவாக்கும் வகையில், உயா்கல்விக்கான வாய்ப்புகள் குறித்து, பிரிவு வாரியான பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள் என்னென்ன, கல்லூரிகளை எவ்வாறு தோ்ந்தெடுப்பது, மேற்படிப்பினை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள், போட்டித் தோ்வுகள் போன்ற விவரங்களை, புகழ்பெற்ற வல்லுநா்கள் மற்றும் கல்வியாளா்களைக் கொண்டுவழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன.

தோல்விகளை வெற்றிகளின் தொடக்கமாக மாணவா்கள் எடுத்துக்கொண்டு முன்னேற வேண்டும். இவ்வாய்ப்பினை பயன்படுத்தி சரியான உயா்கல்வியைத் தோ்ந்தெடுத்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்றாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ரா.பேபி, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் க.ரேணுகாதேவி, சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் மு.கணபதி, சென்னை மேலாண்மைத்துறை பேராசிரியா் நா.கோபி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com