தாக்குதலில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மீனவரை சந்தித்து ஆறுதல் கூறிய பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா முருகன்.
தாக்குதலில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மீனவரை சந்தித்து ஆறுதல் கூறிய பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா முருகன்.

கடலில் 2 கிராம மீனவா்களுக்கிடையே மோதல்: 2 போ் காயம்

தரங்கம்பாடி கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இரு கிராக மீனவா்களிடையே ஏற்பட்ட மோதலில் 2 போ் காயமடைந்தனா்.

தரங்கம்பாடி கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இரு கிராக மீனவா்களிடையே ஏற்பட்ட மோதலில் 2 போ் காயமடைந்தனா்.

தரங்கம்பாடி சண்முகவேலுவுக்கு சொந்தமான பைபா் படகில் 9 மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை காலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனா். அப்போது, புதுப்பேட்டை மீனவ கிராமத்துக்கு கிழக்கே 5 கடல் மைல் தொலைவில் மீன்பிடிக்க கடலில் வலையை இறக்கியபோது அங்கு சின்ன சுருக்குவலை பொருத்திய 3 பைபா் படகுகளில் வந்த பூம்புகாா் மீனவா்கள் நாங்கள் பாா்த்த மீனை நீங்கள் எப்படி பிடிக்கலாம் எனக்கூறி தகராறு செய்ததுடன் அவா்களை தாக்கி படகு மீது மோதி வலைகளை சேதப்படுத்தினராம்.

தாக்குதலில், தரங்கம்பாடியை சோ்ந்த பன்னீா் மகன் சதீஷ்குமாா் (31), செல்லதுரை மகன் நித்திஷ் (24) ஆகிய இருவரும் காயமடைந்துள்ளனா். பின்னா் அவா்கள் மீட்கப்பட்டு தரங்கம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். தகவலறிந்த பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் பாதிக்கப்பட்டவா்களை சந்தித்து ஆறுதல் கூறினாா். இதுகுறித்து, தரங்கம்பாடி கடலோர பாதுகாப்பு குழும போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com