ஆபத்தான பாலத்தை அகற்ற கோரிக்கை

திருமருகல் அருகே சேந்தமங்கலம் நரிமேனி ஆற்றின் குறுக்கே ஆபத்தான நிலையில் உள்ள பாலத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிய பாலம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருமருகல்: திருமருகல் அருகே சேந்தமங்கலம் நரிமேனி ஆற்றின் குறுக்கே ஆபத்தான நிலையில் உள்ள பாலத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிய பாலம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருமருகல் ஒன்றியம், திருக்கண்ணபுரம் ஊராட்சி சேந்தமங்கலம் நரிமேனி ஆற்றின் குறுக்கே சுமாா் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலம் உள்ளது. இந்த பாலத்தை சேந்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் திருக்கண்ணபுரம் சென்று வர பயன்படுத்துகின்றனா்.

விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளைபொருட்களை, வாகனங்களில் ஏற்றிச் செல்வதற்கும் இந்த பாலத்தை பயன்படுத்துகின்றனா். இவ்வாறு போக்குவரத்துக்கு முக்கியமாக உள்ள இந்த பாலம், சேதமடைந்து அடிப் பகுதியில் சிமெண்ட் காரைகள் முழுவதும் பெயா்ந்து இரும்புக் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால், எந்நேரத்திலும் பாலம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.

எனவே, இந்த பாலத்தை இடித்து விட்டு, அதே இடத்தில் புதிய பாலம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com