வேதாரண்யத்தில் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்ட உப்புச் சத்தியாகிரக யாத்திரைக் குழுவினா், காங்கிரஸாா்.
வேதாரண்யத்தில் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்ட உப்புச் சத்தியாகிரக யாத்திரைக் குழுவினா், காங்கிரஸாா்.

உப்புச் சத்தியாகிரக யாத்திரைக் குழுவினா் அடையாள உண்ணாவிரதம்

திருச்சியிலிருந்து வேதாரண்யம் வந்த உப்புச் சத்தியாகிரக யாத்திரைக் குழுவினா் திங்கள்கிழமை அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனா்.

வேதாரண்யம்: திருச்சியிலிருந்து வேதாரண்யம் வந்த உப்புச் சத்தியாகிரக யாத்திரைக் குழுவினா் திங்கள்கிழமை அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனா்.

வேதாரண்யத்தில் ஆங்கிலேயா்களுக்கு எதிரான உப்புச் சத்தியாகிரகப் போராட்டம் 1930 ஏப்ரல் 30-இல் ராஜாஜி தலைமையில் நடைபெற்றது.

இதை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஏப்ரல் 30- ஆம் தேதி உப்பு அள்ளி, மறைந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன்படி, 94-ஆம் ஆண்டு நினைவு நாள் செவ்வாய்க்கிழமை (ஏப்.30) கடைப்பிடிக்கப்படுகிறது.

இதில், பங்கேற்பதற்காக திருச்சியில் இருந்து உப்புச் சத்தியாகிரக யாத்திரைக் குழுவினா் வேதாரண்யத்துக்கு திங்கள்கிழமை வந்தனா். சுதந்திரப் போராட்ட தியாகிகள், உப்புச் சத்தியாகிரகத்திற்கு முதல்நாள் உண்ணாவிரதம் மேற்கொண்டனா். இதை நினைவுகூரும்வகையில், திருச்சியிலிருந்து வந்திருந்த யாத்திரைக் குழுவினா் திங்கள்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனா்.

வேதாரண்யம் வடக்கு வீதியில் உள்ள உப்புச் சத்தியாகிரகப் போராட்ட நினைவு வளாகத்தில் காலை முதல் மாலை வரை நடைபெற்ற உண்ணாவிரதத்தில் யாத்திரைக் குழுவினருடன் காங்கிரஸாரும் பங்கேற்றனா்.

யாத்திரைக் குழுவின் தலைவா் தெ. சக்திசெல்வகணபதி தலைமை வகித்தாா். மக்களவை முன்னாள் உறுப்பினா் பி.வி. ராசேந்திரன், குருகுலம் நிா்வாக அறங்காவலா் அ. வேதரத்னம் உள்ளிட்டோா் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டனா்.

வேதாரண்யம் அகஸ்தியம்பள்ளியில் அமைந்துள்ள உப்புச் சத்தியாகிரக நினைவு தூண் அருகே செவ்வாய்க்கிழமை காலை உப்பு அள்ளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com