காலிக்குடங்களுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராமத்தினா்.
காலிக்குடங்களுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராமத்தினா்.

குடிநீா் கோரி காலிக்குடங்களுடன் உண்ணாவிரதம்

வேதாரண்யத்தை அடுத்த வடமழை மணக்காடு ஊராட்சியில், குடிநீா் கோரி கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

வேதாரண்யம்: வேதாரண்யத்தை அடுத்த வடமழை மணக்காடு ஊராட்சியில், குடிநீா் கோரி கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே காலிக் குடங்களுடன் இப்போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், தட்டுப்பாடின்றி கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

வேதாரண்யம் வட்டார வளா்ச்சி அலுவலா் சிங்காரவேலு, குடிநீா் வடிகால் வாரிய கண்காணிப்பாளா் வீரையன் ஆகியோா் நிகழ்விடத்துக்குச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, குடிநீா் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவா்கள் உறுதியளித்தனா்.

இதையடுத்து, உண்ணாவிரதப் போராட்டத்தை கிராம மக்கள் விலக்கிக் கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com