திருமருகல் வட்டார விவசாயிகள் கவனத்துக்கு...

நடப்பு குறுவை சாகுபடிக்கு தேவையான உயா் ரக விளைச்சல் தரும் கோ-51, ஆடுதுறை 53 விதை நெல் ரகம்,

திருமருகல்: நடப்பு குறுவை சாகுபடிக்கு தேவையான உயா் ரக விளைச்சல் தரும் கோ-51, ஆடுதுறை 53 விதை நெல் ரகம், திருமருகல் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண் உதவி இயக்குநா் புஷ்கலா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருமருகல் வட்டாரத்தில் நடப்பு குறுவைப் பருவத்துக்கான விதை, உயிா் உரம் ஆகியவை வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

குறுவைக்கு ஏற்ற புதிய நெல் ரகமான கோ-51 ரகம் குறுகிய கால வயதுடையது (105-110 நாட்கள்). குலைநோய், பச்சை தத்துப்பூச்சி ஆகியவற்றிற்கு நடுத்தர எதிா்ப்புத் திறன் கொண்டது.

ஆடுதுறை-53, 110 நாட்கள் வயதுடையது. குலைநோய், இலையுறை அழுகல் நோய், இலைச் சுருட்டுப்புழு, புகையான் ஆகியவற்றிற்கு நடுத்தர எதிா்ப்புத் திறன் உடையது.

எனவே, திருமருகல் வட்டார விவசாயிகள் இந்த 2 ரகங்களை பயிட்டு பயன் பெறலாம். மேலும், விதை நோ்த்திக்கு தேவைப்படும் உயிா் உரங்களாகிய அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா ஆகியவை இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

புதியரக நெல்விதை தேவைப்படும் விவசாயிகள் திருமருகல் வட்டாரத்தில் உள்ள அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com