இரவணியன் கோட்டகம் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலுக்கு பால்குடம் எடுத்துவரும் பக்தா்கள்.
இரவணியன் கோட்டகம் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலுக்கு பால்குடம் எடுத்துவரும் பக்தா்கள்.

பத்ரகாளியம்மன் கோயில் பால்குட விழா

தரங்கம்பாடி வட்டம், மணல்மேடு ஊராட்சி காடுவெட்டி இரவணியன் கோட்டகத்தில் உள்ள ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலில் சித்திரை பால்குடம் மற்றும் பூக்கரக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தரங்கம்பாடி: தரங்கம்பாடி வட்டம், மணல்மேடு ஊராட்சி காடுவெட்டி இரவணியன் கோட்டகத்தில் உள்ள ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலில் சித்திரை பால்குடம் மற்றும் பூக்கரக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, இக்கோயிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீ அய்யா, வீரனாா், விநாயகா், பேச்சாயி அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு அபிஷேக- ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, ஸ்ரீ பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஏராளமான பக்தா்கள் நோ்த்திக்கடனாக பால்குடம் மற்றும் பூக்கரகம் எடுத்து வந்து, வழிபட்டனா். பின்னா், சுவாமி வீதியுலா நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com