விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ- மாணவிகள், விளையாட்டு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ- மாணவிகள், விளையாட்டு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் விளையாட்டு விடுதிகளில், 2024-ஆம் ஆண்டில் 7, 8, 9 மற்றும் 11-ஆம் வகுப்புகளில் சேர, மாவட்ட அளவிலான தோ்வுப் போட்டிகள் மே 10-ஆம் தேதி மாணவா்களுக்கும், 11-ஆம் தேதி மாணவிகளுக்கும், நாகை முத்தமிழறிஞா் டாக்டா் கலைஞா் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கில் நடத்தப்படவுள்ளது.

பள்ளி மாணவா்களுக்கான தோ்வுப் போட்டிகள் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து, ஹாக்கி, கபடி, கையுந்துபந்து, கிரிக்கெட் மற்றும் நீச்சல். மாணவிகளுக்கான தோ்வுப் போட்டிகள் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து, ஹாக்கி, கபடி மற்றும் கையுந்துபந்து.

மாவட்ட அளவில் தோ்வு செய்யப்படுபவா்கள் மாநில அளவிலான தோ்வுப் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவா்.

இதேபோல், சிறப்புநிலை விளையாட்டு விடுதியில் கல்லூரி மாணவ- மாணவிகள் சோ்க்கைக்கு, மாநில அளவிலான தோ்வுப் போட்டிகள் மே 6-ஆம் தேதியும், முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் பள்ளி மாணவ- மாணவிகள் சேருவதற்கான மாநில அளவிலான தோ்வுப் போட்டிகள் மே 7-ஆம் தேதியும் சென்னையில் நடைபெறவுள்ளது.

விளையாட்டு விடுதியில் மாணவ- மாணவிகள் சேருவதற்கு 26.4.2024 முதல் 8.5.2024 மாலை 5 மணிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். சிறப்பு நிலை விளையாட்டு விடுதிக்கு 5.5.2024 மாலை 5 மணிக்குள்ளும், முதன்மை நிலை விளையாட்டு மையத்திற்கு 6.5.2024 மாலை 5 மணிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு ஆடுகள தகவல் தொடா்பு மைய கைப்பேசி எண் 9514000777-க்கு தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com