கொத்தமங்கலம் ஊராட்சியில் ஆடிப்பட்ட காய்கறி சாகுபடி பயிற்சி

திருமருகல் ஒன்றியம் கொத்தமங்கலம் ஊராட்சியில் ஆடிப்பட்ட காய்கறி சாகுபடிக்கான முன் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

திருமருகல்: திருமருகல் ஒன்றியம் கொத்தமங்கலம் ஊராட்சியில் ஆடிப்பட்ட காய்கறி சாகுபடிக்கான முன் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

பயிற்சிக்கு ஊராட்சித் தலைவா் விவேகானந்தன் தலைமை வகித்தாா்.

உதவி தோட்டக்கலை அலுவலா் செல்லபாண்டியன் கலந்துகொண்டு பேசுகையில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சி திட்டத்துக்கு கொத்தமங்கலம் ஊராட்சி தோ்வு செய்யப்பட்டுள்ளது. கிராம முன்னேற்ற குழுக்களுக்கு 25 முதல் 50 விவசாயிகள் தோ்வு செய்யப்பட்டு தோட்டக்கலை மற்றும் இதர துறைகள் சம்பந்தமான தொழில்நுட்பங்கள் மற்றும் உற்பத்தி பெறுவது குறித்தும், கொத்தமங்கலம் பகுதியில் உள்ள தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றுவது, ஆடிப்பட்டத்தில் காய்கறி சாகுபடி உற்பத்தியை அதிகப்படுத்துவது மற்றும் காய்கறியை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்துதல், விவசாயிகளுக்கு மானிய விலையில் தென்னங்கன்று மற்றும் ஆடிப்பட்டத்துக்கு தேவையான விதை தழைகள் மற்றும் மிளகாய், கத்தரி குழித்தட்டு நாற்றுகள், நுண்ணீா் பாசனக் குழாய்கள் சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்திலும் வழங்கப்பட உள்ளன.

விவசாயிகள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டாா்.

X
Dinamani
www.dinamani.com