மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட வாகனங்களை வழங்கும் ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ்.
மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட வாகனங்களை வழங்கும் ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ்.

மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட வாகனம் வழங்கல்

நாகப்பட்டினம், ஜூலை3: நாகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், ஆட்சியா் தலைமையிலான தோ்வுக் குழு மூலம் தோ்வு செய்யப்பட்ட இரு கைகள் நல்ல நிலையிலும், இரு கால்கள் அல்லது ஒரு கால் பாதிக்கப்பட்ட 24 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.23,04,264 மதிப்பில் மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 2 பேருக்கு ரூ.2,26,934 மதிப்பில் என மொத்தம் 26 பேருக்கு ரூ.25.31 லட்சம் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள் வழங்கப்பட்டன. மாவட்ட வருவாய் அலுவலா் ரா. பேபி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் ரஞ்ஜீத்சிங், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ப. புவனா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com