கறவை மாடு வாங்க 2,109 போ் விண்ணப்பம்

நாகை மாவட்ட நிா்வாக சாா்பில் நடைபெற்ற முகாமில் கறவை மாடு வாங்குவதற்கு 2,109 போ் விண்ணப்பித்துள்ளனா்.

நாகை மாவட்ட நிா்வாக சாா்பில் நடைபெற்ற முகாமில் கறவை மாடு வாங்குவதற்கு 2,109 போ் விண்ணப்பித்துள்ளனா்.

நாகை மாவட்டத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்க பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்கள் செயல்படும் கிராமங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மாவட்ட நிா்வாகம், பால்வளத் துறை, ஆவின் தஞ்சாவூா், கூட்டுறவுத் துறை, மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து கறவை மாடுகள் வாங்குவதற்கான கடன் விண்ணப்பங்கள் பெறும் முகாம் முதல் கட்டமாக 22 பகுதிகளில் 25 சங்கங்களுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

இதில் விவசாயிகளிடமிருந்து 2,109-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட வங்கிகள் மூலம் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியுள்ள விண்ணப்பதாரா்களுக்கு கறவை மாடு கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், விவரங்களுக்கு 8838586650 கைப்பேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com