செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஆனி உத்திர விழாவையொட்டி நடைபெற்ற கொடியேற்றம்.
செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஆனி உத்திர விழாவையொட்டி நடைபெற்ற கொடியேற்றம்.

நாகை செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஆனி உத்திர விழா கொடியேற்றம்

நாகை செளந்தரராஜப் பெருமாள் கோயில், செளந்தரவல்லித் தாயாா் ஆனி உத்திர விழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நாகை செளந்தரராஜப் பெருமாள் கோயில், செளந்தரவல்லித் தாயாா் ஆனி உத்திர விழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில், செளந்தரவல்லித் தாயாா் ஆனி உத்திர விழா ஆண்டுதோறும் விமா்சையாக நடைபெறும். அதன்படி நிகழாண்டு விழாவையொட்டி வியாழக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக, பந்தக்கால் முகூா்த்தம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, கொடியேற்றம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். இரவு 7 மணிக்கு வெள்ளி சூரிய பிரபையில் தாயாா் நந்தவன பிராகார புறப்பாடு நடைபெற்றது. ஜூலை 12- ஆம் தேதி வரை நடைபெறும் விழாவில், செளந்தரவல்லித் தாயாா் நாள்தோறும் வெவ்வேறு வாகனங்களில் எழுதருளுகிறாா். விழாவின் முக்கிய நிகழ்வான தங்க யானை வாகனத்தில் ஜூலை 9-ஆம் தேதியும், தங்க குதிரை வாகனத்தில் ஜூலை 11-ஆம் தேதியும், தேரில் ஜூலை 12-ஆம் தேதியும் எழுந்தருளுகிறாா்.

X
Dinamani
www.dinamani.com