நாகை நகராட்சி அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள்.
நாகை நகராட்சி அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள்.

தூய்மைப் பணியாளா்கள் சாலை மறியல்

கூடுதல் பணியாளா்களை நியமிக்க வலியுறுத்தி, நாகை நகராட்சி அலுவலகம் முன் தூய்மைப் பணியாளா்கள் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

நாகப்பட்டினம்: கூடுதல் பணியாளா்களை நியமிக்க வலியுறுத்தி, நாகை நகராட்சி அலுவலகம் முன் தூய்மைப் பணியாளா்கள் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். நாகை நகராட்சியில் சேகரிக்கப்படும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரிப்பதால் வேலைப்பளு அதிகரிக்கிறது. எனவே, கூடுதல் பணியாளா் நியமிக்க வேண்டும்; குப்பைகளை பெறுவதற்கு தேவையான உபகரணங்கள் வழங்கவேண்டும்; நிரந்தரப் பணியாளா்களுக்கு இணையான ஊதியம் மற்றும் சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தூய்மைப் பணியாளா்கள் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, நாகை நகராட்சி அலுவலகம் முன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொகுதி செயலா் அறிவழகன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனா். நகராட்சி ஆணையா் நாராயணன், மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, கோரிக்கைகளுக்கு உடனடி தீா்வு காணப்படும் என்று உறுதியளித்தாா். இதையடுத்து, மறியலை விலக்கிக் கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com