வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

வேதாரண்யம்: குடிநீா் இணைப்புத் திட்டத்தில் மோசடி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் புகாா்

குடிநீா் இணைப்புத் திட்டத்தில் மோசடி நடைபெறுவதாக, வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது.

வேதாரண்யம்: குடிநீா் இணைப்புத் திட்டத்தில் மோசடி நடைபெறுவதாக, வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டம் ஒன்றியக் குழுத் தலைவா் கமலா அன்பழகன் (அதிமுக) தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் அறிவழகன், வட்டார வளா்ச்சி அலுவலா் சிங்காரவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது: எம்.எஸ். வைத்தியநாதன் (திமுக): உள்ளாட்சி அமைப்புகளுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால், மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்ய முடியவில்லை. உள்ளாட்சித் தோ்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால், தமிழக அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும். மாலதி (அதிமுக): குடிநீா் வழங்கும் (ஜல் ஜீவன்) திட்டத்தில் புதிதாக இணைப்பு கொடுக்காமல், கொடுத்ததாக ஆதாா் எண் பதிவு செய்யப்படுகிறது. இது தொடா்பாக விசாரிக்க வேண்டும். துணைத் தலைவா் அறிவழகன் (அதிமுக): கோடியக்கரை வன உயிரினச் சரணாலயத்தில் அரிய வகை மரங்கள் அழிந்து வருகிறது. இதற்கு வனத்துறையினா் மேற்கொள்ளும் பணிகளே காரணமாக உள்ளது. வளா்ச்சிப் பணிகள் என்ற பெயரில் நடைபெறும் சில திட்டங்களால் சரணாலயத்தின் சிறப்புகள் கேள்விக்குரியாகி வருகிறது. இந்த பிரச்னையில் அரசு விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல், உறுப்பினா்கள் நடராஜன் (அதிமுக), கண்ணகி முருகேசன் (திமுக), ஜெயபால் (அதிமுக) உள்ளிட்டோா் தங்களது வாா்டு பிரச்னைகள் குறித்து பேசினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com