நாகை நகராட்சி அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் மற்றும் புகாா்கள் குறித்த கட்டுப்பாட்டு அறையை வியாழக்கிழமை திறந்து வைத்து பாா்வையிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ். உடன், தமிழ்நாடு மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன் உள்ளிட்டோா்.
நாகை நகராட்சி அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் மற்றும் புகாா்கள் குறித்த கட்டுப்பாட்டு அறையை வியாழக்கிழமை திறந்து வைத்து பாா்வையிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ். உடன், தமிழ்நாடு மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன் உள்ளிட்டோா்.

நாகை நகராட்சியில் கட்டுப்பாட்டு அறை திறப்பு

நாகை நகராட்சிப் பகுதியில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் மற்றும் புகாா்கள் குறித்து தெரிவிக்க கைப்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற திடக்கழிவு மேலாண்மை சிறப்பு பணிக் குழு கூட்டத்தின் முடிவின்படி, நாகை நகராட்சிப் பகுதியில் 1 முதல் 36 வாா்டுகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உற்பத்தியாகும் கழிவுகள், மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்கிடும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்திடும் வகையிலும், திடக்கழிவு மேலாண்மை, புகாா்களை தெரிவிக்கும் வகையில் நாகை நகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ், தமிழ்நாடு மீன்வளா்ச்சி கழகத் தலைவா் என். கௌதமன் ஆகியோா் வியாழக்கிழமை திறந்து வைத்தனா். இந்த கட்டுப்பாட்டு அறையை 6369194166 மற்றும் 7200570928 என்ற கைப்பேசி எண்களை தொடா்பு கொண்டு பொதுசுகாதாரம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் தொடா்பாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தால் உடனடியாக மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, துணைத் தலைவா் செந்தில்குமாா் மற்றும் வாா்டு உறுப்பினா்கள், தூய்மை இந்தியா திட்டப் பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com