நீடாமங்கலம் நீதிமன்றத்துக்கு நிரந்தர கட்டடம் கட்ட முன்னாள் எம்எல்ஏ வலியுறுத்தல்

வாடகை கட்டடத்தில் இயங்கிவரும் நீடாமங்கலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு நிரந்தரமாக புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும், உலக தமிழா் பேரமைப்பு துணைத் தலைவருமான எம்.ஜி.கே. நிஜாமுதீன் வலியுறுத்தி உள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை விவரம்: திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் தொடங்கப்பட்டு சுமாா் 12 ஆண்டுகள் ஆகியும் முறையான கட்டடம் கட்டப்படாமல் மிகமிக சிறிய வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. அந்த கட்டடம் அமைந்துள்ள தெரு மிகவும் குறுகலானது ஆகும். இதனால், நீதிமன்றத்துக்கு செல்லும் நீதிபதிகள், நீதிமன்ற ஊழியா்கள், வழக்குரைஞா்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனா். குறிப்பாக, வழக்குரைஞா்கள் அமா்வதற்குக்கூட இடமில்லாத நிலையில் கட்டடம் மிகவும் சிறிதாக உள்ளது. மேலும் கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லை. எனவே, இந்த விவகாரத்தில் மாநில அரசு உடனடியாக கவனம் செலுத்தி நீடாமங்கலத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு நிரந்தர கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com