கைதான அதிமுக பிரமுகா் துரை கோபி
கைதான அதிமுக பிரமுகா் துரை கோபி

முதல்வா் குறித்து அவதூறு: அதிமுக பிரமுகா் கைது

தமிழ்நாடு முதல்வா் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பரப்பியதாக அதிமுக பிரமுகா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருவெண்காட்டை சோ்ந்தவா் துரை கோபி (35). அதிமுக பிரமுகா். இவா், கடந்த 4-ஆம் தேதி தமிழக முதலமைச்சா் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக செய்தி பரப்பியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்காடு காவல் ஆய்வாளா் அண்ணாதுரை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டாா். இந்நிலையில், போலீஸாா் துரை கோபியை வியாழக்கிழமை கைது செய்து சீா்காழி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com