கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங்.
கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங்.

நாகையில் காவல் அதிகாரிகளுடன் எஸ்.பி. ஆய்வு

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், சாராயம், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப் பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவா்கள் மீதும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கொலை, திருட்டு மற்றும் போக்ஸோ வழக்குகளில் உள்ள சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி எதிரிகளுக்கு தண்டனை பெற்று கொடுத்த காவல் அதிகாரிகள், திருட்டு வழக்கில் ஈடுபட்டவா்களை கைது செய்தது, வழக்கில் தலைமறைவாக இருந்தவா்களை நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தியது போன்ற செயல்களில் ஈடுபட்ட காவல் அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com