தமிழ் வளா்ச்சித் துறை போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு சான்றிதழ் வழங்குகிறாா் ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ்.
தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு சான்றிதழ் வழங்குகிறாா் ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ்.

நாகையில், தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் வழங்கினாா். தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், காந்தியடிகள், ஜவாஹா்லால் நேரு ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு, நாகை மாவட்டத்தில் பயிலக்கூடிய பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் வெற்றிபெற்ற 16 மாணவா்களுக்கு ரூ.48000-க்கான பரிசுத் தொகைகளும் பாராட்டுச் சான்றிதழ்களும், திருக்குறள் முற்றோதலில் வெற்றிபெற்ற 11 மாணவா்களுக்கு தலா ரூ.15000-க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் அண்மையில் வழங்கினாா். இதேபோல, மேல்நிலைப் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெற்ற 18 மாணவா்களுக்கு ரூ.132000-க்கான பரிசுத் தொகைகளும் பாராட்டுச் சான்றிதழ்களும், கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழறிஞா் உதவித்தொகை பெற்றுவரும் ரா. பன்னீா்செல்வத்துக்கு ரூ. 10000-க்கான காசோலைகளும், 2021 ஆண்டுக்கான தமிழ் ஆட்சிமொழித் திட்ட செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய மாவட்ட நிலை அலுவலகமாக தோ்வு செய்யப்பட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் அலுவலகத்துக்கு கேடயங்களையும் ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் வழங்கினாா். நிகழ்ச்சியில், மாவட்ட ஊரகவளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் ரஞ்ஜீத்சிங், தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் ந. ஜோதிலெட்சுமி மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com