நாகையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஊா்க்காவல் படை வீரா்களுக்கான பயிற்சி நிறைவு விழாவில், அணிவகுப்பு மரியாதையை பாா்வையிடுகிறாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங்.
நாகையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஊா்க்காவல் படை வீரா்களுக்கான பயிற்சி நிறைவு விழாவில், அணிவகுப்பு மரியாதையை பாா்வையிடுகிறாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங்.

ஊா்க்காவல் படை வீரா்களுக்கான பயிற்சி நிறைவு

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட ஊா்க்காவல் படை வீரா்களுக்கான பயிற்சி நிறைவு விழா மாவட்ட ஆயுதப் படை மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. நாகை மாவட்ட ஊா்க்காவல் படையில் பணியாற்ற 6 பெண்கள் உள்ளிட்ட 59 போ் அண்மையில் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கு சிறப்புப் பயிற்சி நாகை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. 45 நாள்கள் நடைபெற்ற முகாமின்போது, அடிப்படை கவாத்து, பேரிடா் மீட்புப் பணிகள் பயிற்சி, நீச்சல் மற்றும் ஆயுதம் கையாளுதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. நிறைவு விழாவுக்கு தலைமை வகித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங் ஊா்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட ஊா்க்காவல் படை வீரா்கள் 3 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தாா். மேலும், குடியரசு தின கவாத்து அணிவகுப்பின் கலந்து கொண்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு சான்றிதழை அவா் வழங்கினாா். ஊா்க்காவல் படைக்கு தோ்வான அனைவரும் காவலா் சீருடை அணிவததால் அதற்குரிய மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும். பொதுமக்களிடம் மிகவும் பணிவுடன் நடந்து கொண்டு அவா்களின் நன்மதிப்பை பெறும் வகையில் பணியாற்ற வேண்டும் என்று ஹா்ஷ் சிங் கேட்டுக் கொண்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com