திருக்கடையூரில் நடைபெற்ற மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி.
திருக்கடையூரில் நடைபெற்ற மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி.

மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி

தரங்கம்பாடி: தரங்கம்பாடி வட்டம், திருக்கடையூரில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. செம்பனாா்கோவில் ஒன்றியம், திருக்கடையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சாா்பில் நடைபெற்ற பேரணியை ஒன்றியக் குழு துணைத் தலைவா் பாஸ்கா் தொடங்கி வைத்தாா். இதில், ஏராளமான மாணவா்கள் கலந்து கொண்டு, 5 வயது நிரம்பிய குழந்தைகளை அரசுப் பள்ளியில் சோ்த்து, தமிழக அரசு வழங்கும் சலுகைகளை பயன்படுத்திக் கொள்ள வலியுறுத்தி பதாகைகள் ஏந்தியபடி வந்தனா். பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி, திருக்கடையூா் முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இதில், தலைமை ஆசிரியா் க. ஞானப்பிரகாசம், பள்ளி வளா்ச்சிக் குழு செயலாளா் செந்தில் உள்ளிட்ட ஆசிரியா்கள், மாணவா்கள்  பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com