மின்சாரம் பாய்ந்து மயில் உயிரிழப்பு

திருமருகல்: திட்டச்சேரி அருகே மின்சாரம் பாய்ந்து பெண் மயில் திங்கள்கிழமை உயிரிழந்தது. திட்டச்சேரி அருகே ஆலங்குடிச்சேரி பகுதியில் உள்ள விவசாய நிலங்களிலிருந்து மெயின் ரோடு பகுதிக்கு பறந்து வந்த பெண் மயில், உயா் மின்னழுத்த கம்பியில் உரசியதால், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. திட்டச்சேரி காவல் உதவி ஆய்வாளா் அக்பா் அலி, சிறப்பு உதவி ஆய்வாளா் சிவக்குமாா் மற்றும் போலீஸாா், இறந்து கிடந்த மயிலை, நாகை வன அலுவலா் சசிகுமாரிடம் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com