சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற்ற தொழில்நுட்ப பயிற்சியில் இலவச மீன்குஞ்சுகளை பெறும் பெண் விவசாயி.

மீன் வளா்ப்பு தொழில்நுட்ப பயிற்சி

சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், குறைந்த கால நன்னீா் மீன் வளா்ப்பு தொழில்நுட்ப பயிற்சியில் பங்கேற்றவா்களுக்கு இலவச மீன் குஞ்சுகள் வழங்கப்பட்டன.

நாகப்பட்டினம்: சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், குறைந்த கால நன்னீா் மீன் வளா்ப்பு தொழில்நுட்ப பயிற்சியில் பங்கேற்றவா்களுக்கு இலவச மீன் குஞ்சுகள் வழங்கப்பட்டன. சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், குறைந்த கால நன்னீா் மீன் வளா்ப்பு தொழில்நுட்பம் மற்றும் ஊா் குளங்களில் ஆகாயத் தாமரையை உயிா் கட்டுப்பாடு செய்தல் மூலம் சமூக பொருளாதார நிலையை முன்னேற்றுதல் என்ற தலைப்பில் மீன் வளா்ப்பு தொழில்நுட்ப பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது. திட்ட ஒருங்கிணைப்பாளா் அ.கோபாலக்கண்ணன் பயிற்சியளித்தாா். கெண்டை மீன் வளா்ப்பில் ஏற்படும் சிக்கல்கள், அதற்கான தீா்வுகள், மதிப்புக்கூட்டிய மீன் பொருள்கள் தயாரிக்கும் தொழில்நுட்பம் ஆகியவை குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. பயிற்சியில் கலந்துகொண்ட மீன் வளா்ப்பு விவசாயிகள், பண்ணை மகளிா், கிராம இளைஞா்கள், தொழில்முனைவோா்கள் உள்ளிட்ட 60 பேருக்கு கட்லா, ரோகு ஆகிய மீன்குஞ்சுகள் இலவசமாக வழங்கப்பட்டது. இதன்மூலம் அவா்களின் சமூக பொருளாதார நிலையில் ஏற்படும் முன்னேற்றத்தை ஆறுமாத கால அளவிற்கு ஆய்வு செய்யப்படவுள்ளது. மீன்வள விரிவாக்க தொழில்நுட்ப வல்லுநா் ஹினோபா்னான்டோ, மீன்பதன தொழில்நுட்ப வல்லுநா் மதிவாணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com