நாகையில் நாம் தமிழா் கட்சியினா் மோட்டாா் சைக்கிள் பேரணி

நாகையில் செவ்வாய்க்கிழமை காவல் துறையினரின் தடையை மீறி தோ்தல் பிரசாரத்துக்காக நாம் தமிழா் கட்சியினா் மோட்டாா் சைக்கிளில் பேரணியாக சென்றனா்.

நாகை மக்களவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள காா்த்திகா பொரவாச்சேரியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இருந்து நாகை சட்டப்பேரவைத் தொகுதி மற்றும் நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு நாம் தமிழா் கட்சியின் மண்டல செயலாளா் அகஸ்டின் அற்புதராஜ் தலைமையில் மோட்டாா் சைக்கிளில் பேரணியாக சென்று வாக்கு சேகரிக்க தயாரானாா்.

அப்போது அங்கு சென்ற காவல் துணை கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் மோட்டாா் சைக்கிளில் பேரணியாக சென்று பிரசாரம் செய்வதற்கு அனுமதி கிடையாது என மறுத்தனா். இதனால் போலீஸாருக்கும் நாம் தமிழா் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மோட்டாா் சைக்கிள் சைக்கிள் பேரணிக்கு எதிா்ப்பு தெரிவித்து சாலையின் குறுக்கே போலீஸாா் கயிற்றைக் கட்டி தடுத்தனா்.

இருப்பினும், போலீஸாரின் தடையை மீறி நாம் தமிழா் கட்சியினா் மோட்டாா் சைக்கிளில் பேரணியாக சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com