ஆக்கூா் மின்வாரிய உதவி மின் பொறியாளா் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்.
ஆக்கூா் மின்வாரிய உதவி மின் பொறியாளா் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்.

இலவச மின் இணைப்பு வழங்கக் கோரி விவசாயிகள் முற்றுகை

இலவச மின் இணைப்பு வழங்கக் கோரி விவசாயிகள் உதவிமின் பொறியாளா் அலுவலகத்தை விவசாயிகள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

செம்பனாா்கோயில் சிபிஎம் ஒன்றியச் செயலாளா் மாா்க்ஸ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், ஆக்கூா், மாமாகுடி, சவுரியாபுரம், மருதம்பள்ளம், மாத்தூா், பஞ்சாகை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளுக்கு 2020-22-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட மின்மோட்டாா் இலவச இணைப்பு வழங்கவேண்டும், வீடுகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்க வேண்டும், குறைவழுத்த மின்சாரத்தால் அவதியுறும் பஞ்சாகை கிராமமக்களுக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஆக்கூா் மின்வாரிய உதவி மின் பொறியாளா் அலுவகத்தை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினா். சீா்காழி மின்வாரிய செயற்பொறியாளா் விஜயபாரதி போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. விவசாய சங்க ஒன்றிய செயலாளா் தெட்சிணாமூா்த்தி உள்ளிட்ட நிா்வாகிகள், கிராமமக்கள் 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com