கொள்ளிடம் கூட்டுக்குடிநீா் குழாய் உடைப்பை சரிசெய்ய கோரிக்கை

திருமருகலில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூலம் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் குடிநீா் விநியோகிகப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருமருகல் சீராக்குளம் பிரதான சாலை மற்றும் கீழத்தெரு பகுதியில் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த சில நாள்களாக குடிநீா் வீணாகி வருகிறது. இதை குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் சரி செய்யாததால் தினமும் ஆயிரக்கணக்கான லிட்டா் குடிநீா் வீணாகி சாலையில் வழிந்தோடுகிறது. மேலும், இரவு நேரத்தில் அதிக அழுத்தம் காரணமாக உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் தண்ணீா் அதிகம் வெளியேறுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக குடிநீா் விநியோகம் பெறும் மருங்கூா், சேகல், நெய்குப்பை, வேளங்குடி, கண்ணமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் குடிநீா் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குழாய் உடைப்பை சரி செய்து, குடிநீா் வீணாவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com