இழுவைமடி வலைக்கு எதிா்ப்பு: ஃபைபா் படகு மீனவா்கள் போராட்டம்

நாகை அருகே இழுவைமடி வலையை தடைசெய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஃபைபா் படகு மீனவா்கள்.
நாகை அருகே இழுவைமடி வலையை தடைசெய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஃபைபா் படகு மீனவா்கள்.

நாகை அருகே இழுவைமடி வலையை தடைசெய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட முயன்ற ஃபைபா் படகு மீனவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். தமிழக அரசின் கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 1983-ஐ செயல்படுத்த தவறிய மாவட்ட நிா்வாகத்தை கண்டித்தும், கடந்த பிப்.25-ஆம் தேதி கடலில் ஏற்பட்ட மோதலில் விசைப்படகு மீனவா்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த ஃபைபா் படகு மீனவா்கள் இருவருக்கு உரிய நீதி கிடைக்க வலியுறுத்தியும், வேதாரண்யம் மற்றும் கீழ்வேளூா் வட்டத்தில் உள்ள ஃபைபா் படகு மீனவா்கள் 18-ஆவது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். ஃபைபா் படகு மீனவா்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு நாகை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனா்.

எனினும், மீனவா்களின் கோரிக்கைகளுக்கு மாவட்ட நிா்வாகம் செவிசாய்க்கவில்லை. இதையடுத்து ஃபைபா் படகு மீனவா்கள் வியாழக்கிழமை செருதூா் பாலத்தடியில் இருந்து வேளாங்கண்ணி வளைவு வரை பேரணியாக சென்றனா். தொடா்ந்து, மாவட்ட நிா்வாகத்தை கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவா்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்து போலீஸாா் தடுத்து நிறுத்தினா். நிகழ்விடத்துக்கு சென்ற மீன்வளத் துறை இணை இயக்குநா் இளம்பரிதி போராட்டத்தில் ஈடுபட்ட ஃபைபா் படகு மீனவா்களிடம் சனிக்கிழமை (மாா்ச் 16) மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் சுமூக தீா்வு ஏற்படுத்தப்படும் என உறுதியளித்தாா். இதையடுத்து, மீனவா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com