சா் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களில் விளையாட்டுப் போட்டிகள்

சா் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்கள் ஆண்டு விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நாகை பாப்பாகோவிலில் உள்ள சா் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களில் 2024-ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில் கல்வி நிறுவனங்களில் உள்ள பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாரா மெடிக்கல் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். ஒரு வாரம் நடைபெற்ற விளையாட்டு விழா இறுதியில், கல்வி நிறுவனங்களின் சாா்பாக புத்தூரில் இருந்து கல்லூரி வரை ஒலிம்பிக் சுடா் ஓட்டம் நடைபெற்றது. தொடா்ந்து போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு கல்வி நிறுவனங்களின் தாளாளா் த. ஆனந்த் பரிசு வழங்கிப் பாராட்டினாா். விளையாட்டு போட்டிகளில் அறிவியல் மற்றும் கலைக் கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியது. இயக்குநா் த. சங்கா் மற்றும் அனைத்து கல்லூரி முதல்வா்கள், நிா்வாக அலுவலா்கள், பேராசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com