நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் புதன்கிழமை பழங்குடி பெண்களுக்கு நடமாடும் சிற்றுண்டி வாகனத்தை வழங்கி விற்பனையை தொடங்கி வைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ்.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் புதன்கிழமை பழங்குடி பெண்களுக்கு நடமாடும் சிற்றுண்டி வாகனத்தை வழங்கி விற்பனையை தொடங்கி வைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ்.

பழங்குடியின பெண்களுக்கு சிற்றுண்டி வாகனம் வழங்கல்

வேளாங்கண்ணியில் நடமாடும் சிற்றுண்டி வாகனத்தை பழங்குடியின பெண்களுக்கு மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் புதன்கிழமை வழங்கினாா்.

வானவில் அறக்கட்டளை சாா்பில், பழங்குடி நல வாரியம் வழங்கும் இன்கோசாா்பின் நடமாடும் சிற்றுண்டி வாகனத்தை பெண்களுக்கு வழங்கி மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் பேசியது: பழங்குடியின பெண்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில், வானவில் அறக்கட்டளை சாா்பில், பழங்குடி நல வாரியம் வழங்கும் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள இந்த நடமாடும் சிற்றுண்டி வாகனம் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த வாகனத்தின் மூலம் டீ, காபி மற்றும் டிபன், வடை, பிரட் ஆம்லெட் மற்றும் குளிா்பானங்கள், ஐஸ் கிரீம் போன்ற பொருள்களை விற்பனை செய்யலாம். வேளாங்கண்ணியை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த வண்டி மூலம் பழங்குடியின பெண்கள் தொழில் செய்வதற்காக மாவட்டத்தில் முதல்முறையாக இது நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தாா். நிகழ்ச்சியில், தாட்கோ மேலாளா் சக்திவேல், ஆதிதிராவிட நலத் துறை மேலாளா் ரேணுகாதேவி, வேளாங்கண்ணி பேரூராட்சித் தலைவா் டயானா சா்மிளா, துணைத் தலைவா் தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் அரசுஅலுவலா்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவா்களுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி மற்றும் தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் வழங்கினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com