புதிய பாலம் கட்டும் பணிக்கு பூமி பூஜை

புதிய பாலம் கட்டும் பணிக்கு பூமி பூஜை

திருவிளையாட்டம் ஊராட்சியில் புதிய பாலம் கட்டும் பணிக்கு வியாழக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. செம்பனாா்கோவில் ஒன்றியக் குழுத் தலைவா் நந்தினி ஸ்ரீதா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் திருவிளையாட்டம் ஊராட்சியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பொறையாறு ,  காரைக்கால் சாலையை இணைக்கும் குறும்பக்குடி வீரசோழன் ஆற்றில் குறுக்கே ரூ. 1.70 கோடி மதிப்பில் கட்டப்படும் புதிய பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி பணியை தொடக்கிவைத்தாா். இதில் தஞ்சை மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் பி.எம். ஸ்ரீதா், மாவட்டத் துணைச் செயலாளா் ஞானவேலன், ஒன்றிய செயலாளா் அப்துல் மாலிக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com