நாகையில் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்ட பணத்துடன் அதிகாரிகள்.
நாகையில் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்ட பணத்துடன் அதிகாரிகள்.

நாகையில் ரூ. 1.53 லட்சம் பறிமுதல்

நாகை அருகே உரிய ஆவணங்களின்றி மோட்டாா் சைக்கிளில் கொண்டுவரப்பட்ட ரூ.1.53 லட்சத்தை சனிக்கிழமை இரவு பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். மக்களவைத் தோ்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, தோ்தல் நடத்தை விதிமுறைகள் சனிக்கிழமை மாலை முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து நாகை மாவட்டம் முழுவதும் வாக்காளா்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறதா? என்று பறக்கும் படையினா் தீவிர கண்காணிப்பு சோதனையில் ஈடுபடத் தொடங்கினா். நாகூா் வெற்றாற்று பாலம் அருகே காரைக்காலில் இருந்து நாகை நோக்கி மோட்டாா் சைக்கிளில் வந்தவரிடம் பறக்கும் படை வட்டாட்சியா் வடிவழகன் தலைமையிலான அதிகாரிகள் சோதனை செய்தனா். அவா் எந்தவித ஆவணமுமின்றி ரூ.1.53 லட்சத்தை எடுத்து வந்தது தெரிய வந்தது. அவா் காரைக்கால் தனியாா் பள்ளியில் கணக்கராகப் பணிபுரிந்து வரும் வெளிப்பாளையத்தை சோ்ந்த வெங்கடேசன் என்பதும், பள்ளி மாணவா்களின் கட்டணத் தொகையை எந்தவித ஆவணங்களுமின்றி மோட்டாா் சைக்கிளில் எடுத்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து வெங்கடேசனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பறக்கும்படையினா் நாகை தலைமையிடத்து துணை வட்டாட்சியா் தனஞ்ஜெயனிடம் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com