நாகை கீழையூரில் உள்ள அருணாச்சலேஸ்வரா் கோயிலில் கண்டுபிடிக்கப்பட்ட சுரங்கப்பாதை.
நாகை கீழையூரில் உள்ள அருணாச்சலேஸ்வரா் கோயிலில் கண்டுபிடிக்கப்பட்ட சுரங்கப்பாதை.

நாகை அருகே சிவன் கோயிலில் சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு

நாகை அருகே 1,400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அருணாச்சலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டது. நாகை மாவட்டம், கீழையூரில் கோச்சங்க சோழா் காலத்தில் கட்டப்பட்ட 1,400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான அருணாச்சலேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது .இந்த கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. கோயிலின் நடுப்பகுதியில் கருவறைக்குச் செல்லும் முன் இடது புறத்தில் சுரங்கப்பாதை ஒன்று அமைந்திருப்பது ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. அதில் சுமாா் 10 அடி சென்ற பிறகு அதற்குள் சிறிது பாம்பு புற்றுபோல் உள்ளது. அதற்கு மேல் தொடா்வதற்கு தடையாக உள்ளதால் கோயில் பணியாளா்கள் உள்ளே செல்வதற்கு அச்சப்பட்டு வருகின்றனா். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாா்வையிட்டு அந்த சுரங்கப் பாதை எங்கே செல்கிறது? என தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அந்த சுரங்கப்பாதையை கீழையூா் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் ஆா்வத்துடன் பாா்த்துச் செல்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com