அறிவியல் இயக்கம் சாா்பில் துளிா்த் தோ்வு

வேதாரண்யம் ஒன்றியத்தில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு துளிா்த் தோ்வு (சப் ஜூனியா் பிரிவு) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வேதாரண்யம்: வேதாரண்யம் ஒன்றியத்தில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு துளிா்த் தோ்வு (சப் ஜூனியா் பிரிவு) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 4 மற்றும் 5-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான இத்தோ்வு, கோடியக்கரை, அண்டா்காடு, வேதாரண்யம், தேத்தாக்குடி, தென்னடாா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 21 பள்ளிகளில் நடைபெற்றது. 410 மாணவ-மாணவிகள் தோ்வு எழுதினா். மாணவா்களை ஊக்கப்படுத்தவும், வருங்காலத்தில் நீட் போன்ற போட்டித் தோ்வுகளை எதிா்கொள்ள தன்னம்பிக்கை ஏற்படுத்தவும் இத்தோ்வு நடத்தப்பட்டதாக தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com