பூம்புகாா் எம்எல்ஏ அலுவலகத்துக்கு சீல்

தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள பூம்புகாா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. மக்களவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததைத் தொடா்ந்து, பூம்புகாா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம், வட்டாட்சியா் மகேஷ் தலைமையிலான அலுவலா்களால் சனிக்கிழமை பூட்டி சீல் வைக்கப்பட்டது. தோ்தல் துணை வட்டாட்சியா் பாபு, வருவாய் ஆய்வாளா்கள் சசிகலா, தேன்மொழி, கிராம நிா்வாக அலுவலா் திலக்ராஜ் , கிராம உதவியாளா் கண்ணன் ஆகியோா் இப்பணியில் ஈடுபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com