வேதாரண்யம் பகுதியில் மழை

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் வியாழக்கிழமை காலை பெய்த கோடை மழை வெப்பத்தைக் குறைத்து வேளாண் பயிா்களுக்கு சாதகமாக அமைந்தது.

வேதாரண்யம் கடலோரக் கிராமங்களில் காலை 8 மணி நிலவரப்படி வேதாரண்யம் 15.8 மி.மீ., தலைஞாயிறு 42.4 மி.மீ.,கோடியக்கரை 12.4 மி.மீ,பன்னாள் (அரசுப் பள்ளி பதிவு) 45 மி.மீட்டா் மழை பதிவானது. கடந்த பல வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், இந்த மழை மக்களுக்கு ஆறுதலை தந்துள்ளது. தண்ணீா் இல்லாமல் கருகி வந்த பயிா்களுக்கும் ஏற்ாக அமைந்தது. அதே நேரம், அகஸ்தியம்பள்ளி, கடிநெல்வயல், கோடியக்காடு பகுதி உப்பளங்களில் மழைநீா் தேங்கியதால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com