நாகூா் கடற்கரையில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தலைமையில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற வேளாண் கல்லூரி மாணவா்கள்.
நாகூா் கடற்கரையில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தலைமையில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற வேளாண் கல்லூரி மாணவா்கள்.

நூறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி தூய்மைப் பணி

நாகையில் நூறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி வேளாண் கல்லூரி மாணவா்களுடன், மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தூய்மைப் பணி மேற்கொண்டாா். நாகூா் கடற்கரையில் மக்களவைத் தோ்தலை முன்னிட்டு 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் முன்னிலையில் வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகள் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழியை சனிக்கிழமை எடுத்துக் கொண்டனா். தொடா்ந்து கடற்கரை பகுதியில் வேளாண் கல்லூரி மாணவா்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சியரும் தூய்மைப் பணி மேற்கொண்டாா். மாவட்ட வருவாய் அலுவலா் ரா. பேபி நாகை நகராட்சி ஆணையா் நாராயணன் தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளா் முத்தமிழ் ஆனந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com