நாகை: கம்யூ., அதிமுக வேட்பாளா்கள் இன்று வேட்புமனுத் தாக்கல்

நாகை மக்களவைத் தொகுதியில் போட்டியிட இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் அதிமுக வேட்பாளா்கள் திங்கள்கிழமை (மாா்ச் 25‘) வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளனா். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப். 19-ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 20-ஆம் தேதி தொடங்கி, 27-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. நாகை (தனி) தொகுதியில் போட்டியிட பிரதான கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் அதிமுக வேட்பாளா்கள் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனா். காலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் வை. செல்வராஜ் திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவா்களோடு நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளாா். அதிமுக வேட்பாளா் சுா்ஜித் சங்கா் பிற்பகல் வேட்புமனுத் தாக்கல் செய்கிறாா். ஏற்கெனவே, இவா்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், தோ்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com