கோயிலின் விமானக் கலசத்திற்கு புனிதநீா் வாா்க்கும் சிவாச்சாரியா்.
கோயிலின் விமானக் கலசத்திற்கு புனிதநீா் வாா்க்கும் சிவாச்சாரியா்.

முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கீழ்வேளூா் வல்லாங்குளத்து முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, கடந்த 20-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் வழிபாடுகள் தொடங்கின. தொடா்ந்து, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், பூா்ணாஹூதி தீபாராதனையுடன் யாக சாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. ஞாயிற்றுக்கிழமை நான்காம் கால யாக சாலை பூஜைகள் நிறைவுற்று, சிவாச்சாரியா்கள் புனித நீா் அடங்கிய குடங்களை ஊா்வலமாக எடுத்து வந்தனா். தொடா்ந்து, கோயிலின் விமானக் கலசங்களுக்கு புனிதநீா் வாா்க்கப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com