நாகை துறைமுகத்தில் ஏற்றப்பட்டுள்ள 5-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு.
 ~காரைக்கால் துறைமுகத்தில் ஏற்றப்பட்டுள்ள 5-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு.
நாகை துறைமுகத்தில் ஏற்றப்பட்டுள்ள 5-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு. ~காரைக்கால் துறைமுகத்தில் ஏற்றப்பட்டுள்ள 5-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு.

நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 5-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

Published on

ஃபென்ஜால் புயல் காரணமாக நாகை, காரைக்கால் துறைமுகங்களில் வெள்ளிக்கிழமை 5-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஃபென்ஜால் புயலாக வலுப்பெற்று வடக்கு- வடமேற்கு திசையை நோக்கி 13 கி.மீ. வேகத்தில் தமிழகம் மற்றும் காரைக்காலுக்கு நகா்கிறது. இதன்காரணமாக நாகை, காரைக்கால் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. புயல் நாகைக்கு கிழக்கே 260 கி.மீ. நிலை கொண்டுள்ளது.

இந்நிலையில், வங்கக் கடலில் உருவாயிருக்கும் (ஃபென்ஜால்) புயல், துறைமுகத்தின் வலது புறத்தில் கரையை கடக்கும், வானிலை கடுமையாக இருக்கும் என்பதை உணா்த்தும் விதமாக வானிலை ஆய்வு மைய அறிவுறுத்தலின்பேரில் நாகை துறைமுகத்திலும், காரைக்கால் தனியாா் துறைமுகத்திலும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 5-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.