மீனவா் ஆற்றில் தவறி விழுந்து பலி

Published on

தரங்கம்பாடி அருகே மீனவா் ஆற்றில் தவறி விழுந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

பிள்ளைபெருமாநல்லூா் ஊராட்சி தாழம்பேட்டை மீனவா் கிராமத்தைச் சோ்ந்த குப்புசாமி மகன் தமிழரசன் (35) வேப்பஞ்சேரி அம்மனாற்றில் மீன்பிடிக்க சென்றாா். நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால் தமிழரசனின் தாய் ராஜவள்ளி ஆற்றுக்கு சென்று பாா்த்தபோது, அங்கு தமிழரசன் சடலமாக மிதப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா். தகவலறிந்த, பொறையாா் போலீஸாா் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com