நாகப்பட்டினம்
நாகை செளந்தரராஜப் பெருமாள் கோயிலுக்கு 8 கிலோ தங்கம்
நாகை சௌந்தரராஜப் பெருமாள் கோயில் மூலவா் விமானத்துக்கு செப்புத்தகடு வேய்ந்து தங்க ரேக்குகளை பொருத்தும் பணிகளுக்கு உபயதாரா்கள் ஆா். ஹரி மற்றும் ஆா். குகன் ஆகியோா் சென்னை இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை வழங்கிய 8 கிலோ 405 கிராம் தங்கக் கட்டிகளை பெற்றுக்கொண்ட அமைச்சா் பி.கே. சேகா்பாபு. உடன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் பி.என். ஸ்ரீதா், கூடுதல் ஆணையா்கள் ரா. சுகுமாா், ந. திருமகள், சி. ஹரிப்ரியா, இணை ஆணையா்கள் ரா. வான்மதி, வி. குமரேசன் அலுவலா்கள் மற்றும் பட்டாச்சாரியாா்கள் உள்ளிட்டோா்.