கலைத் திருவிழா: சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு

அண்டா்காடு பள்ளியில் கலைத் திருவிழா போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவி மரியாவை பாராட்டிய ஆத்மா குழு தலைவா் சதாசிவம் உள்ளிட்டோா்.
அண்டா்காடு பள்ளியில் கலைத் திருவிழா போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவி மரியாவை பாராட்டிய ஆத்மா குழு தலைவா் சதாசிவம் உள்ளிட்டோா்.
Updated on

வேதாரண்யம் அருகே கலைத் திருவிழா போட்டியில் வண்ணம் தீட்டுதல் கலைப் பிரிவில் மாநில நிலையில் முதலிடம் பெற்ற பள்ளி மாணவியை கிராம மக்கள் பாராட்டினா்.

ஆதனூா் ஊராட்சி, அண்டா்காடு சுந்தரேச விலாஸ் உதவி தொடக்கப் பள்ளி இரண்டாம் வகுப்பு மாணவி பி. மரியா, கோவையில் அண்மையில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் உதவி பெறும் பள்ளி 1 முதல் ஐந்தாம் வகுப்பு மாணவா்களுக்கான கலைப் பிரிவில் வண்ணம் தீட்டுதல் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்றாா். இதையடுத்து, மாணவிக்கு கிராமத்தினா் சாா்பில் பள்ளியில் பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், ஆத்மா திட்டத் தலைவா் என். சதாசிவம், வட்டார கல்வி அலுவலா் ராஜமாணிக்கம், பள்ளியின் தலைமையாசிரியா் த. இரவீந்திரன், வழிகாட்டி ஆசிரியா் மு.வசந்தா, பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியா் வி. சித்திரவேல், பள்ளி செயலா் ஆா். ஆறுமுகம் உள்ளிட்டோா் பங்கேற்று மாணவிக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com