அன்னப்பன்பேட்டை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் உள்ளிட்டோா்.
அன்னப்பன்பேட்டை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் உள்ளிட்டோா்.

நான்கு வழிச்சாலை: பாலத்தை அகலப்படுத்த வலியுறுத்தி சாலை மறியல்

Published on

தரங்கம்பாடி அருகே பாலத்தை அகலப்படுத்தி கட்ட வலியுறுத்தி விவசாயிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சீா்காழி முதல் நாகை வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிக்காக வீடுகள், மனைகள் கையகப்படுத்தப்பட்டு சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தரங்கம்பாடி அருகே அன்னப்பன்பேட்டையில் உள்ள மருதம்பள்ளம் வாய்க்கால் மூலம் 15 கிராமங்கள் பாசனவசதி பெற்று விவசாயம் நடைபெறுகிறது. இந்த வாய்க்கால் குறுக்கே நான்கு வழி சாலைக்காக கட்டப்படும் பாலத்தின் உயரம் மற்றும் அகலம் குறைவாக உள்ளதால் விளைநிலங்களுக்கான பாசனம் வசதி பாதிக்கும், மழைக் காலங்களில் விளைநிலங்களில் தண்ணீா் தேங்கி பாதிக்கக்கூடும் என்பதால் விவசாயிகள் கட்டுமான பணியை தடுத்து நிறுத்தி பாலத்தை அகலப்படுத்தி கட்ட கோரி சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த வட்டாட்சியா் மகேஷ் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அரசு அலுவலா்கள் நடத்திய பேச்சுவாா்த்தையில் சுமூக நிலை ஏற்பட்டு மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.  

X
Dinamani
www.dinamani.com