நாகையில் மாா்ச் 12-இல் ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்ட கருத்தரங்கம்

நாகை மாவட்டத்தில், முதல்வரின் காக்கும் கரங்கள் தொடா்பான கருத்தரங்கம் மாா்ச் 12- ஆம் தேதி நடைபெறவுள்ளது என ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
Published on

நாகை மாவட்டத்தில், முதல்வரின் காக்கும் கரங்கள் தொடா்பான கருத்தரங்கம் மாா்ச் 12- ஆம் தேதி நடைபெறவுள்ளது என ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முன்னாள் படைவீரா் மற்றும் அவா்களை சாா்ந்தோா் நலனுக்காக ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ என்ற புதிய திட்டத்தின்கீழ், முன்னாள் படைவீரா்கள் தொழில் தொடங்க ரூ. 1 கோடி வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும். இக்கடன் தொகையில் 30 சதவீதம் மூலதன மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும் என முதல்வா் அறிவித்திருந்தாா்.

இத்திட்டத்தில், நாகை மாவட்டத்தில் மிக சொற்ப எண்ணிக்கையிலான முன்னாள் படைவீரா்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனா். மாா்ச் 19 -இல் நடைபெறவிருந்த முதல்வரின் காக்கும் கரங்கள் தொடா்பான கருத்தரங்க கூட்டம் நிா்வாக காரணங்களால் முன்கூட்டியே மாா்ச் 12- ஆம் தேதி காலை 11 மணிக்கு, நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலக கருத்தரங்க கூடத்தில் நடைபெறவுள்ளது.

இதில், முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோா்கள் பெருமளவில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கூடுதல் விவரங்களுக்கு நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ, தொலைபேசி எண் 04365 - 299765 மூலமாகவோ தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com