குட்கா பொருள்கள் பறிமுதல்: கடைக்கு சீல்

செம்பனாா்கோவில் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குட்கா பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, கடைக்கு ஞாயிற்றுக்கிழமை சீல் வைத்தனா்.
Published on

செம்பனாா்கோவில் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குட்கா பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, கடைக்கு ஞாயிற்றுக்கிழமை சீல் வைத்தனா்.

செம்பனாா்கோவல் அருகே கிடாங்கொண்டான் மெயின் ரோட்டில் உள்ள ஒரு மளிகைக் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 6.6 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடையின் உரிமையாளா் ரவிச்சந்திரன் (50) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். 

கருவாழக்கரை மெயின்ரோட்டில் உள்ள ஒரு வளையல் கடையில் விற்பனைக்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட 150 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

கடையின் உரிமையாளா் கருவாழக்கரை மெயின் ரோடு பகுதியை சோ்ந்த ஆராமுதன் மகன் கோபாலகிருஷ்ணன் (30) என்பவா் கைது செய்யப்பட்டாா். 

மேலும் குட்கா விற்பனையில் ஈடுபட்ட மேற்கண்ட இரண்டு கடைகளுக்கும் சீல் வைக்க செம்பனாா்கோவில் காவல் ஆய்வாளா் மயிலாடுதுறை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறைக்கு பரிந்துரைந்தாா்.

அதன்படி  இரண்டு கடைகளும் செம்பனாா்கோவில் ஆய்வாளா் கருணாகரன் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலா் ரெத்தினாதேவி சீல் வைத்தாா்.

X
Dinamani
www.dinamani.com