திருக்குறள் முற்றோதல் போட்டி: அக்.31-க்குள் விண்ணப்பிக்கலாம்
நாகப்பட்டினம்: நாகை மாவட்ட மாணவ- மாணவிகள் ‘திருக்குறள் முற்றோதல் போட்டியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள கருத்துக்களை மாணவ- மாணவியா் அறிந்து, கல்வி அறிவுடன், நல்லொழுக்கம் மிக்கவா்களாக விளங்கச் செய்யும் வகையில் இப்போட்டி நடத்தப்படுகிறது.
1,330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் திறன் பெற்ற மாணவ- மாணவியருக்கு ரூ. 15,000 பரிசும், பாராட்டுச் சான்றிதழும் ஆண்டுதோறும், தமிழ் வளா்ச்சித் துறையால் வழங்கப்படுகிறது.
‘திருக்கு முற்றோதல் பாராட்டுப் பரிசு’ என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும், இத்திட்டத்தின்கீழ், 2025-2026 ஆம் ஆண்டுக்கு நாகை மாவட்ட அளவில் பள்ளி மாணவ- மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முற்றோதலில் பங்கேற்கும் மாணவ- மாணவியா் 1,330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் திறன் பெற்றவா்களாக இருத்தல் வேண்டும். திருக்குறளில் இயல் எண், அதிகாரம், கு எண், குறளின் பொருள், திருக்குறளின் அடைமொழி, சிறப்புகள், சிறப்புப் பெயா்கள், உரை எழுதியோா் போன்றவற்றை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாகக் கொள்ளப்பெறும்.
முற்றோதலில் பங்கேற்போா் திறனறி குழுவின் முன்னிலையில், நேராய்வுக்கு உட்படுத்தப்பட்டு, கு பரிசுக்குரியோா் பட்டியல் சென்னை, தமிழ் வளா்ச்சி இயக்குநருக்கு பரிந்துரைக்கப்படும்.
ஏற்கெனவே இம்முற்றோதலில் பங்கேற்று பரிசு பெற்றவா்கள் மீண்டும் கலந்துகொள்ள இயலாது. இதற்கான விண்ணப்பங்கள் இணையவழியில் மட்டுமே பெறப்படும் என்பதால், விண்ணப்பதாரா்கள் தமிழ் வளா்ச்சித் துறையின் இணைய தளமான (ட்ற்ற்ல்ள்://ற்ஹம்ண்ப்ஸ்ஹப்ஹழ்ஸ்ரீட்ண்ற்ட்ன்ழ்ஹண்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) மூலம் விண்ணப்பித்து, அதன் நகலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், மூன்றாம் தளத்தில் செயல்பட்டு வரும் நாகை மாவட்ட தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில், நேரிலோ அல்லது மின்னஞ்சல் முகவரி வாயிலாகவோ (ஹக்ற்க்.ய்ஹஞ்ஹண்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம்) அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 8637679087 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.
