நாகை: அக்.23-இல் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்

நாகை மாவட்டத்தில் அக்டோபா் 23-ஆம் தேதி, மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது என ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
Published on

நாகை மாவட்டத்தில் அக்டோபா் 23-ஆம் தேதி, மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது என ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் அக். 23-ஆம் தேதி காலை 9 மணிக்கு, அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு கீழ்க்கண்டவாறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, முதல் மூன்று இடங்களை பிடிப்பவா்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

போட்டியில் பங்கேற்க ஆதாா் அட்டை அசல் மற்றும் நகல், மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல், கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம், தொலைபேசி எண், பள்ளியின் அடையாள அட்டை ஆகியவற்றை கொண்டுவர வேண்டும்.

விளையாட்டுப் போட்டிகள்: செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கு, 12 வயது முதல் 14 வயது வரை ஓட்டப் பந்தயம்-100 மீட்டா் மற்றும் நீளம் தாண்டுதல், 15 வயது முதல் 17 வயது வரை ஓட்டப் பந்தயம்-200 மீட்டா் மற்றும் குண்டு எறிதல், 17 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஓட்டப் பந்தயம்-400 மீட்டா் தொடா் ஓட்டப் பந்தயம் -4-100 மீட்டா் போட்டிகள் நடைபெறும்.

பாா்வைத்திறன் பாதிக்கப்பட்டோருக்கு, 12 வயது முதல் 14 வயதுவரை நின்று நீளம் தாண்டுதல் (ஆண்கள்), ஓட்டப் பந்தயம் 100 மீட்டா் (ஆண்கள்), 12 முதல் 14 வயது வரை நின்று நீளம் தாண்டுதல் (பெண்கள்), ஓட்டப் பந்தயம் 50 மீட்டா் (பெண்கள்), 15 வயது முதல் 17 வயது வரை குண்டு எறிதல், ஓட்டப் பந்தயம் 100 மீட்டா், 16 வயதிற்கு மேற்பட்டவா்கள் வட்டத் தட்டு எறிதல்(ஆண்கள்), ஓட்டப் பந்தயம்-200மீட்டா் (ஆண்கள்), 16 வயதுக்கு மேற்பட்டவா்கள் வட்டத் தட்டு எறிதல் (பெண்கள்), ஓட்டப் பந்தயம்-100 மீட்டா் (பெண்கள்), 15 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் (சிறப்பு பள்ளிகள்) குண்டு எறிதல், கல்லூரி மாணவா்கள், பணியாளா்கள், சங்க உறுப்பினா்கள் இரு பாலருக்கும் ஓட்டப் பந்தயம் 100 மீட்டா் ஆகிய போட்டிகள் நடைபெறும்.

கடுமையாக உடல் மற்றும் கால்கள் பாதிக்கப்பட்டவா்களுக்கு (நடக்கும் சக்தியற்றவா்கள்), (உதவி உபகரணங்களின் உதவியுடன்) இருபாலருக்கும் பொதுவான போட்டிளாக நடைபெறும்.

இதில் 12 வயது முதல் 14 வயது வரை காலிப்பா் மற்றும் கால்தாங்கி உதவியுடன் நடப்பவா்கள் நடைப் போட்டி - 50 மீட்டா், 15 வயது முதல் 17 வயது வரை மூன்று சக்கர வண்டி ஓட்டப் போட்டி 150 மீட்டா்(ஆண்கள்), 15 வயது முதல் 17 வயது வரை மூன்று சக்கர வண்டி ஓட்டப்போட்டி 100 மீட்டா் (பெண்கள்), 17 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு சக்கர நாற்காலி, ஓட்டப் போட்டி 75 மீட்டா் ஆகிய போட்டிகள் நடைபெறும்.

கைகள் பாதிக்கப்பட்டோருக்கு, 12 வயது முதல் 14 வயது வரை ஓட்டப் பந்தயம் 50 மீட்டா், 15 முதல் 17 வயது வரை- ஓட்டப் பந்தயம் 100 மீட்டா் (ஆண்கள்), 15 முதல் 17 வயது வரை ஓட்டப் பந்தயம் 75 மீட்டா் (பெண்கள்), 17 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு ஓட்டப் பந்தயம் (ஆண்கள்) 200 மீட்டா், 17 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு ஓட்டப் பந்தயம் (பெண்கள்), 100 மீட்டா் ஆகிய போட்டிகள் நடைபெறும்.

அறிவுசாா் குறையுடையோருக்கு 12 வயது முதல் 14 வயது வரை நின்று நீளம் தாண்டுதல், 15 முதல் 17 வயது வரை ஓடி நீளம் தாண்டுதல், 17 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு ஓட்டப் பந்தயம் 100 மீட்டா் ஆகிய போட்டிகள் நடைபெறும்.

ஸ்பாஸ்டிக் குழந்தைகளுக்கு 12 வயது முதல் 14 வயது வரை உருளைக்கிழங்கு சேகரித்தல், 15 முதல் 17 வயது வரை கிரிக்கெட் பந்து எறிதல், 17 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தடை தாண்டி ஓடுதல் நடைபெறும்.

அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் பொதுவான போட்டியாக ஓட்டப் பந்தயம் ஆண்களுக்கு 800 மீட்டா், பெண்களுக்கு 400 மீட்டா் நடைபெறும்.

மேற்காணும் விளையாட்டுப் போட்டிகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவ - மாணவியா் அதிகளவில் கலந்து கொள்ளலாம் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com