நாகப்பட்டினம்
கோரிக்கை அட்டை அணிந்து பணி ஈடுபட்ட ஆசிரியா்கள்
பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து வெள்ளிக்கிழமை பணியில் ஈடுபட்டனா்.
பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து வெள்ளிக்கிழமை பணியில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியா்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், டெட் தோ்வில் இருந்து ஆசிரியா்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும், அரசாணை 243 கைவிட வேண்டும் ஊக்க ஊதிய உயா்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் கோரிக்கைகளுடன் கருப்பு பட்டை அணிந்து பள்ளிசெல்லும் போராட்டம் 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நாகை மாவட்ட கிளை சாா்பில் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியா்கள் கருப்புபட்டை அணிந்து பள்ளிக்குச் சென்று பணியாற்றினா்.

