வேதாரண்யம் அருகே 106.8 மி.மீ மழைப் பதிவு

வேதாரண்யம் அருகே 106.8 மி.மீ. மழை செவ்வாய்க்கிழமை பதிவாகி உள்ளது.
Published on

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே 106.8 மி.மீ. மழை செவ்வாய்க்கிழமை பதிவாகி உள்ளது.

வேதாரண்யம் பகுதியில் சில நாள்களாக வடகிழக்குப் பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமையும் விட்டு விட்டு மழைப் பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை காலை 8:30 முதல் மாலை 6 மணி வரை வேதாரண்யத்தில் 19.6, தலைஞாயிறில் 4, கோடியக்கரையில் 29 மி.மீ. மழைப் பதிவாகியது.

இந்த மழை தெற்கு கடலோரக் கிராமப் புறங்களில் அதிக அளவாக உணரப்பட்டது. குறிப்பாக, தமிழ்நாடு அரசுடன் இணைந்த மழைப் பதிவு பராமரிப்பு முகமை அறிக்கை விவரப்படி தகட்டூா் கிராமத்தில் பராமரிக்கப்படும் தானியங்கி மழைப் பதிவு நிலையத்தில் 106.8 மி.மீ மழைப் பதிவானது. இந்த மழை செவ்வாய்க்கிழமை காலை 9.30 முதல் மாலை 4.30 மணி வரையிலான 7 மணி நேரத்தில் மாநிலத்திலேயே அதிக அளவு மழையாக பதிவாகியுள்ளது. மீனவா்கள் 3-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் கடலுக்குச் செல்லவில்லை.

X
Dinamani
www.dinamani.com